நாத்திகர்கள் vs ஆத்திகர்கள்.....சில விளக்கங்கள்



மதம் என்பதே மனிதனுக்கு தேவையில்லை. கடவுளை மறுத்தால் இம்மண்ணில் சொர்க்கத்தை படைக்கலாம் என்று சொல்லிவருகிறார்கள் நாத்திகர்கள். அவர்கள் இந்த மண்ணில் சொர்க்கத்தை படைக்கலாம் என்று சொல்வதன் அர்த்தம் அவர்கள் சொர்க்கமாக நினைக்கும் மது, மாது போன்றவற்றை தடையின்றி அணுகலாம் என்பதால்தான். மதத்தில் இருந்தால் இதையெல்லாம் தொட தடையிருக்கிறதே?

எப்படியும் வாழலாம் என்றிருப்பவர்களை இப்படித்தான் வாழ வேண்டும் என்று பக்குவப்படுத்துவதே மதங்களின் குறிக்கோள் நோக்கம் எல்லாம்.
யாருமே நம்மை பார்க்கவில்லை, கண்காணிக்கவில்லை என்றால் நம்மிடம் தவறுகள் மேலோங்கிவிடும். ஆனால், நம்மை கண்கானிக்க ஒருவன் இருக்கிறான் என்றால்....

உதாரணமாக, ஒரு அலுவலகத்தில் நாம் வேலை செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். நம் தலைக்கு மேல் ஒரு கேமராவை பொருத்தி நாம் ஒழுங்காக வேலை செய்கிறேனா என்று நம் முதலாளி என்னை கண்காணித்துக்கொண்டிருக்கிறார். அப்போது நமக்கு என்ன தோன்றும்?
நம்மை முதலாளி பார்த்துகொண்டே இருக்கிறார். நாம் எதாவது தவறுசெய்தால் தொலைந்தோம் என்ற எண்ணத்தில் நம்மிடம் ஒரு ஒழுங்கு இருக்கும்.

ஆனால், எந்த்க்கேமராவும் தலைக்கு மேலில்லை. கண்கானிக்க யாரும் இல்லை என்றால் நாம் ஒழுங்காகவா வேலை பார்ப்ப்போம்?. நம்மை பார்க்க ஆளில்லை என்ற எண்ணத்தில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா? அதுபோல் தான் கடவுள் நம்பிக்கையும்....

நாம் செய்பவற்றை கடவுள் கண்கானித்துக்கொண்டிருக்கிறார். நாம் ஏதேனும் தவறிழைத்தால் கடவுளிடம் மாட்டிக்கொள்வோம் என்ற நினைப்பில் ஒருவன் இருந்தால் அவன் விபச்ச்சாரம், திருட்டு, குடி, போன்ற அனாச்சாரங்களிலிருந்து ஒதுங்கியே வாழ்வான். மேற்கண்ட தவறுகளை ஒருவன் செய்யாமலிருந்தால் அவனுக்குத்தானே நன்மை.

அதைப்போல, கடவுள் என்ற ஒரு சக்தி இல்லை என்ற நினைப்பிலிருப்பவன் மேற்கண்ட செயல்களை எவ்வித தடையுமின்றி செய்வான். அதனால் அவனுக்கும் அவனை சார்ந்தவர்களுக்கும் தீமையே....

இன்னும் ஒரு உதாரணம்....
ஒருவன் உள்ளூரில் இருக்கும்போது மதுவின் பக்கம் நெருங்கவே மாட்டான். அதே...அவன் வெளியூர் சென்றானென்றால் மது, மாது என்று தலைகீழாக இருப்பான். அவன் ஏன் அப்படி உள்ளூரில் ஒரு மாதிரியும், வெளியூரில் ஒரு மாதிரியும் இரட்டைவேடம் போடுகிறான் என்று பார்த்தால்....அவன் உள்ளூரில் மது அருந்திவிட்டு அவன் வீட்டிற்கு சென்றால் தாய், தந்தை, மனைவி என்று யாரிடமாவது மாட்டிக்கொள்வான். அதே வெளியூரென்றால், தன்னை கண்கானிக்க தாய், தந்தை, மனைவி என்று யாருமே இல்லை என்ற அசட்டு துணிச்சலில் மது, மாது மீது நாட்டம் கொள்கிறான். கடவுள் பக்தி இருப்பவன் உள்ளூரில் இருப்பவன் போன்றவன் எதையும் செய்ய பயப்படுவான்.
கடவுள் பக்தி இல்லாதவன் வெளியூர் செல்பவன் போல....அவன் யாருக்கும் பயப்பட தேவையில்லை.

ஒரு மனிதனை கட்டுப்பாட்டுடன் வாழவைப்பதில் கடவுள் பக்தி பெரும்பங்கு வகிக்கிறது. கடவுள் பக்தியுடனும், கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் வாழ்பவனுக்கு பெயர் மதவாதி என்றால்.....அவன் மதவாதியாகவே இருந்துவிட்டு போகட்டுமே அதனால் நாத்திகர்களுக்கு என்ன பிரச்சினை?.

டிஸ்கி:  மற்றவர்களின் நம்பிக்கையை மூட நம்பிக்கை என்று பழித்துவிட்டு, தன் நண்பனுக்கு அதே (மூட) நம்பிக்கையின் அடிப்படையில் திருமணம் செய்துவைத்த போலி நத்திகர்களை போல ஆத்திகர்களிலும் சில விதிவிலக்குகள் உண்டு.





Related Posts Plugin for WordPress, Blogger...